மணிலா – சபா கடற்பகுதியில் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள், மாலுமிகள் எனப் பலரைக் கடத்திச் சென்று அச்சுறுத்தி வரும் பிலிப்பைன்சைச் சேர்ந்த அபு சயாப் இயக்கத்திற்கு, மலேசியப் பாதுகாப்புப் படை தக்க பதிலடி கொடுத்துள்ளதாக பிலிப்பைன்ஸ் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, சபா கடற்பகுதியில் மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரில், அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவனான ஆப்ரஹாம் ஹமிட்டும் ஒருவன் என்று பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
“ஹமிட்டின் இறப்பு அபு சயாப்பிற்கு ஒரு மிகப் பெரிய பேரிழப்பாக இருக்கும். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவது குறையும்” என்று மேஜர் பிலிமோன் டான் தெரிவித்துள்ளார்.