கோலாலம்பூர் – தமிழர் சமுதாயத்தின் பெருமைகளை விவரிக்கும் நான்கு நூல்களின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கோலாலம்பூர், தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தில் உள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெறுகின்றது.
அந்த 4 புத்தகங்களின் தலைப்புகள் பின்வருமாறு:
1) பொங்கல்
2) தமிழ்ப் புத்தாண்டு
3) தமிழர் வரலாறு
4) யார் தமிழர்?
இந்த நான்கு நூல்களையும் எழுதிய ஆசிரியர் ஆய்வியல் அறிஞர் திருச்செல்வனார் ஆவார்.
இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின்போது தமிழர் வரலாறு பற்றிய ஒரு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகங்களின் உள்ளடக்கச் சுருக்கம் :
தமிழியல் ஆய்வறிஞர் திருச்செல்வம் அவர்கள் நம்நாட்டில் முதன்முதலாக மூலப்பெருந்தமிழ் மரபு என்ற கருத்தியலை நிறுவி நடத்தி வருகிறார். தமிழர் உலகில் முதல் மாந்தர் என்ற குமரிக்கண்ட வரலாற்று உன்மைகளை சான்றுகளுடன் ஐயத்திற்கு இடமின்றி நிறுவிக் காட்டுகின்றார். தமிழர்கள் தங்களின் வரலாற்றினையும் கலையறிவியல் செல்வங்களை நன்குணர்ந்து மொழியாலும், இனத்தாலும், சமயத்தாலும், பண்பாட்டினாலும் உயர்ந்த நாகரிகத்தினாலும் மிகவும் சிறப்புற்று இருந்தனர் என்பதை தெளிவாக உணர்ந்து எழுச்சி பெற இந்த நான்கு நூல்களையும் எழுதியுள்ளார்.
யார் தமிழர்
தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதற்குச் சில தகுதிகள், இயல்புகள், பண்புகள் தேவை. பல்வேறு வாழ்க்கை சூழல்களில் தடம் மாறிக் கிடக்கும் தமிழர்கள் தங்களை இனவழி அடையாளம் காட்டிக் கொள்ளச் சற்றும் தயங்கக் கூடாது. எது தமிழ்நலம், தமிழ்ப்பண்பாடு, தமிழ்ச்சமயம், தமிழ் நெறி இவற்றை கட்டிக் காக்காத, பேணாத நடைமுறைப்படுத்தாத எவரும் தங்களை தமிழர்கள் என்று கூறிக் கொள்ளத்தகுதியற்றவர்கள் என்பதை இந்நூல்வழி வலியுறுத்துகிறார் திருச்செல்வளார்.
தமிழர் வரலாறு
எந்த ஒரு இனமும் தன் வரயாற்றை முறையாக அறியாமல் இருந்தால் அவ்வினம் தலைதூக்க முடியாது எனபது அறிஞர்கள் கருத்து. அவ்வகையில் தமிழர்களின் உண்மை வரலாற்றைத் தமிழர்கள் தெள்ளத் தெளிய அறிந்திருக்க வேண்டும். அவற்றைச் சான்றுகளுடன் நிறுவத் தெரிந்திருக்க வேண்டும். தமிழர் வரலாறு என்பது மாந்த இனத்தின் முதல்வரலாறு. உலக மக்கள் யாவருக்கும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் சொல்லிக் கொடுத்தவன்தமிழன் என்ற பெருமிதத்துடன் தமிழர்கள் தங்களின் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்த்து எழுச்சிப் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இந்நூலிளை இயற்றியுள்ளார்.
தமிழ்ப்புத்தாண்டு
தமிழர்களிடையேநிலவிவரும் குழப்பங்களில் முகாமையானது எது தமிழ்ப்புத்தாண்டு என்பதேயாகும். உலகில் முதல் மாந்தர் என்றப் பெருமைத்குரிய நம்யிடையே இந்தக் குழப்பம் தேவையேயில்லை. இருப்பினும் இச்சிக்கலையும் ஆதாரத்தோடு சுட்டிக் காண்பித்து தமிழப்புத்தாண்டில் ஏற்பட்ட அடிப்புடை கோளாறுகள் யாவை, தமிழர்களிள் தொடராண்டு எது, தமிழர்கள் எத்தகைய வானியல் அறிவாற்றலைக் கொண்டிருந்தனர் என்பதோடு தமிழர் கண்ட ஐந்திறம் (பஞ்சாங்கம்) தொடர்பான அரிய செய்திகளையும் உள்ளடக்கி இருக்கின்றது இந்நூல்.
பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலகப் பொதுமைப் பேசியவன் தமிழன். அவ்வகையில் அவன் கொண்டாடுகின்ற தனிப்பெரும்விழாவாக இருப்பது பொங்கல் விழா. இவ்விழா உலகமாந்தர் அனைவரும் ஏற்றுக் கொண்டாடக் கூடிய ஒரு பொதுமைத் திருவிழா. பொங்கல் விழா ஒன்றே தமிழரின் தனித்தன்மை பொருந்திய பொதுமை அறத்தை உலகுக்குச் சொல்லி மாந்தநேய ஒருமைப் பாட்டிளை வளர்க்கக் கூடியது. அவ்வகையில் இப்பெருவிழாவின் தத்துவங்களை விளக்கிக்காட்டுவதால் இந்நூல் மேலும் பொங்கலை முறைப்படி கொண்டாட எத்தகைய முன்னேற்பாடுகளை செய்யலாம், ஒவ்வொரு நாள் கொண்டாட்டத்தின் இலக்கு, நோக்கு போன்றவற்றையும் தெளிவுறுத்துகிறார். மொத்தத்தில் இந்நூல் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் விளக்கக் கையேடாகவே காட்சியளிக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் டாக்டர் செல்வம் செல்லப்பன்
வெளியிடப்படவிருக்கும் திருச்செல்வனாரின் இந்நான்கு அரிய புத்தகங்களும் RM 100 க்கு விற்கப்படும் . இப்புத்தகங்கள் இலாப நோக்கமின்றி, பெருமளவில் நம்மவர்களை சேர வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள் என நூல் வெளியீட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைவரும் புத்தகங்களை வாங்குவார்கள் என நம்புகிறோம் என்றும் விழா ஏற்பாட்டளார்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்கள் முன்பதிவு செய்து புத்தகங்களை நிகழ்ச்சியில் பெற்றுக்கொள்ளலாம்.
முன்பதிவு செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் வங்கி எண்ணில் Rm 100 ஐ செலுத்தி, உறுதி அட்டையை 0122035464 என்ற புலனத்தில் சேர்த்துவிடுங்கள்.
வங்கி : Hong Leong Bank
எண் : 3560-007-1018
Creative Crux Publication
(ஆக்க அகக்கருப் பதிப்பகம் )
தொடர்புக்கு:
Dr Silvam Sellappan
Tel: 012-2035464