Home Featured கலையுலகம் “அனைத்துலக பேசு தமிழா பேசு” – மலேசியா சார்பில் நால்வர்!

“அனைத்துலக பேசு தமிழா பேசு” – மலேசியா சார்பில் நால்வர்!

1190
0
SHARE
Ad

pesu-tamila-pesuகோலாலம்பூர் – “அனைத்துலக பேசு தமிழா பேசு” மாபெரும் இறுதிச் சுற்று வரும் டிசம்பர் 17-ஆம் தேதி சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கு மலேசியாவைப் பிரதிநிதித்து, அண்மையில் அஸ்ட்ரோ வானவில் மற்றும் வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் உயர்க்கல்வி மாணவர்களிடையே நடைபெற்ற “பேசு தமிழா பேசு” போட்டியின் மாபெரும்  வெற்றியாளர்களான பினாங்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த கலைச் செல்வி, கம்பார், யூதார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிவராஜ் லிங்கராஜ், கெடா, சுல்தான் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த  வசந்தன் பெருமாள், மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த யசோக்தரன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இப்போட்டியில் மலேசியாவைத் தவிர்த்து இந்தியா,சிங்கப்பூர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 19 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

மூன்று சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்றில் போட்டியாளர்கள் தனித்தனியாக தங்களுடைய விவாதத் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றான நாடாளுமன்ற விவாதம், எட்டு போட்டியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு நான்கு மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இப்போட்டியில் நடுவர்களாக பணியாற்றவுள்ள மூவரில் நம் நாட்டின் டாக்டர் ஹரிகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் முதல் நிலை வெற்றியாளருக்க 3000 ரிங்கிட்டும், இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 2500 ரிங்கிட்டும் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு 1000 ரிங்கிட்டும் வழங்கப்படும்.

நம் நாட்டைப் பிரதிநிதித்து செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வோம்.