Home Featured தமிழ் நாடு கோரத் தாண்டவமாடி கரையைக் கடந்தது வார்தா புயல்!

கோரத் தாண்டவமாடி கரையைக் கடந்தது வார்தா புயல்!

676
0
SHARE
Ad

panneer-selvam-vardah-relief-centre

சென்னை – அண்மையக் காலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் கரையோரப் பகுதிகளைக் கடுமையாகத் தாக்கி, கோரத் தாண்டவமாடிய வார்தா புயல் பலத்த சேதங்களை விளைவித்து விட்டு  தமிழகத்தைக் கரை கடந்தது.

வார்தா புயல் தொடர்பான இறுதி நிலவரச் செய்திகள்:

  • வீசியடித்த சூறைக் காற்றின் தாக்கத்தால் நவீன அடுக்குமாடிக் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன. சென்னையின் 5 நட்சத்திர தங்கும் விடுதியான ஹயாட் விடுதியின் ஜன்னல் முகப்புப் பகுதிகள் தெறித்து விழுந்ததை தொலைக்காட்சிகள் காட்டின.
  • தமிழக அமைச்சரவை உறுப்பினர்கள் பம்பரமாய் சுழன்று பணியாற்றினர். “தீயா வேலை செய்றாங்க குமாரு” என டுவிட்டரில் பகிர்வுகள் செய்யப்படும் அளவுக்கு அமைச்சர்கள் மழைக்கோடுடன் களத்தில் இறங்கினர்.
  • கடந்த முறை ஜெயலலிதா களத்திற்கு வரவில்லை என கடித்துக் குதறிய எதிர்க்கட்சிகள் இந்த முறை வாய் திறக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு முன்னேற்பாடுகள், களப் பணிகள் விறுவிறுவென நடந்து முடிந்தன.
  • ஜெயலலிதா இல்லாத காரணத்தால் தமிழக அரசின் பணிகள் முடங்கி விட்டன என்ற குற்றச்சாட்டுகள் எழக் கூடாது என்பதை எடுத்துக் காட்டும் வண்ணம், தமிழக அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட, தமிழக அமைச்சர்களும் மும்முரமாக களத்தில் இறங்கி பணியாற்றினர்.
  • தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரடியாக சில நிவாரண மையங்களுக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே நேரடியாக சென்று உணவுகள் வழங்கினார் (மேலே படம்)
  • மற்ற அமைச்சர்களும் ஆங்காங்கே நிவாரண மையங்களுக்கு சென்றும், குறைகளை நேரடியாகக் கேட்டறிந்தும், சுறுசுறுப்பாக பணியாற்றினர்.
#TamilSchoolmychoice

vardah-storm-ministers-serving-food

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியிலுள்ள நிவாரண மையத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் உணவு வழங்கும் காட்சி…

  • இதுவரை 4 பேர் வார்தா புயல் தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வட்டாரத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • புயலின் வேகத்தால் பல கார்களும், பேருந்துகளும், லாரிகளும் சாலைகளில் கவிழ்ந்தன.
  • சென்னை விமான நிலையத்திலிருந்து ஏறத்தாழ 50 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது விமான சேவைகள் சுமுக நிலைமைக்கு திரும்பியுள்ளன.
  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு, மத்திய அரசு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் முழுமையாக வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

-செல்லியல் தொகுப்பு