Home Featured நாடு பத்துமலை செடிக் கண்காட்சி- மிஃபா முகப்பிடத்தில் பிரதமர் பாராட்டு!

பத்துமலை செடிக் கண்காட்சி- மிஃபா முகப்பிடத்தில் பிரதமர் பாராட்டு!

768
0
SHARE
Ad

mifa-booth-sedik-exhibition-najib-visit

கோலாலம்பூர் – பிரதமர் துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுத்திட்டப் பிரிவு (செடிக்) தனது செயல்திட்டங்கள் சார்ந்த கண்காட்சியை கடந்த சனிக்கிழமை டிசம்பர் 11-ஆம் தேதி பத்துமலையில் நடத்தியது.

இந்தக் கண்காட்சியில் மிஃபாவின் சாதனைகளையும், செயல்திட்டங்களையும் விளக்கும் வகையில் ஒரு முகப்பிடம் வழங்கப்பட்டது. இந்தக் கண்காட்சியை நேரடியாகப் பார்வையிட்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் மிஃபாவின் முகப்பிடத்தையும் பார்வையிட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மிஃபாவின் முகப்பிடத்தில் பிரதமரோடு  இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், செடிக் ஒருங்கிணைப்பாளர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன், மிஃபா குழுவினர்கள், பயிற்சி முகாம் மாணவர்கள் என பலரும் உடனிருந்தனர்.

mifa-booth-najib-visit

மிஃபா வென்ற எப்.ஏ.எம் காற்பந்து கிண்ணத்தை பிரதமரிடம் காட்டி மகிழும் மிஃபா தலைவர் டத்தோ டி.மோகன்…

இந்த கண்காட்சியில்  மிஃபா வென்றெடுத்த எப்.ஏ.எம் கிண்ணம், துன் ரோட்ஷியா கிண்ணம், ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாது நாடு தழுவிய நிலையில் செடிக் மூலம் மிஃபாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள 37 பயிற்சி முகாம்கள் குறித்த தகவல்களும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பயிற்சி முகாம்களில் கிட்டத்தட்ட 2300 மாணவர்கள் பயின்று வருவதாகவும், விளையாட்டுத்துறையின் மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் பிரதமரிடம் விளக்கமளித்தார். மேலும் இந்த பயிற்சி முகாம் மாணவர்களுக்கான களமும், அவர்களின் திறனை கண்டறியும் சோதனைப்போட்டிகளும் மாநில, தேசிய அளவில் நடத்தப்பட்டுள்ளன.

mifa-booth-najib-given-t-shirt

பிரதமரின் பெயர் பொறிக்கப்பட்ட டி-சட்டையை அவருக்கு நினைவுச் சின்னமாக வழங்கிய மிஃபா தலைவர் டத்தோ டி.மோகன்….

மிஃபா பயிற்சி முகாமினை பொறுத்தவரை காற்பந்துத்துறையில் விளையாட்டாளர்கள் மட்டுமில்லாது பயிற்றுநர்கள், நடுவர்கள், நிர்வாகத்துறை என அனைத்து நிலைகளிலும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வெற்றியும் காணப்பட்டு  வருகிறது என டத்தோ எம்.சரவணன், டத்தோ டி.மோகன், டாக்டர் இ.ஆர்.சுப்ரா, டாக்டர் அண்ணாதுரை ஆகியோர் பிரதமரிடம் தெரிவித்தனர்.

சமுதாய மேம்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களுக்கு முதலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களுக்கும், செடிக் இயக்குநர் டத்தோ டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றியையும் தெரிவித்தனர்.

செடிக் வழி 32 பயிற்சி முகாம்களுக்கு, 1200 மாணவர்களுக்கு  நிதி வழங்கப்பட்ட வேளையில் மிஃபா தனது சொந்த முயற்சியில் 37 பயிற்சி மையங்களை நடத்தி அதில் 2300 மாணவர்களுக்கு வாய்ப்பளித்து வாரம் இரண்டு முறை பயிற்சிகளை வழங்கி  வருகிறது. இந்த பயிற்சி முகாம்கள் சமுதாய பெருமக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.