Home Featured தமிழ் நாடு வார்தா புயல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

வார்தா புயல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

550
0
SHARE
Ad

vardah-storm-treesசென்னை – கனமழையுடன் சென்னையையும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளையும் தாக்கிய வார்தா புயலுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

புயலின் காரணமாக மரங்கள் விழுந்தும், கூரைகள் சரிந்தும் சேதங்கள் ஏற்பட்டன.

அவற்றில் சிக்கி சென்னையில் நான்கு பேர், காஞ்சிபுரத்தில் இருவர், திருவள்ளூரில் இருவர், விழுப்புரம் மற்றும் நாகையில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு மையம் அறிவித்துள்ளது.