Home Featured நாடு அன்வார் விடுதலையாவாரா? – புதன்கிழமை தெரியும்!

அன்வார் விடுதலையாவாரா? – புதன்கிழமை தெரியும்!

795
0
SHARE
Ad

ANWAR IBRAHIM_INTERVIEWகோலாலம்பூர் – ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் நாளை புதன்கிழமை அறிவிக்கவுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள அன்வாருக்கு இதுவே கடைசி வாய்ப்பு. எனவே அன்வார் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா? இல்லையா? என்பது நாளை கூட்டரசு நீதிமன்றம் அறிவிக்கவுள்ள தீர்ப்பில் தான் உள்ளது.

இதனிடையே, அன்வாருக்கு ஆதரவாக பிகேஆர் நாளை நீதி அரண்மனைக்கு வெளியே பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice