Home Featured நாடு மலாய்க்காரர்கள் மகாதீரையே பிரதமராக விரும்புகின்றார்கள் – ஆய்வு

மலாய்க்காரர்கள் மகாதீரையே பிரதமராக விரும்புகின்றார்கள் – ஆய்வு

852
0
SHARE
Ad

mahathir

கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என மலாய்க்காரர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பெரும்பான்மையோர் மீண்டும் துன் மகாதீரே பிரதமராக வரவேண்டும் என விரும்புகின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளது. 29 சதவீதத்தினர் மகாதீர் அடுத்த பிரதமராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அடுத்த இரண்டாவது நிலையில் அன்வார் இப்ராகிம், பாஸ் தலைவர் ஹாடி அவாங் ஆகியோர் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட மக்களால் விரும்பப்படுகின்றனர். இவர்களுக்கு தலா 25 சதவீத மலாய்க்கார ஆதரவு கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால், பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின், அடுத்த பிரதமருக்கான தேர்வில் 13 சதவீத ஆதரவு மட்டுமே பெற்று மூன்றாவது நிலையையே பெற்றார்.

லிம் கிட் சியாங் அடுத்த பிரதமராக வருவதற்கு மலாய்க்காரர்களிடையே 1 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும் இன்ஸ்டிடியூட் டாருல் எஹ்சான் என்ற மையம் இந்த ஆய்வை 1,761 பேர்களிடம், கடந்த செப்டம்பரில் நடத்தி மேற்கண்ட முடிவுகளைப் பெற்றுள்ளது.

  • அடுத்து: பெரும்பான்மை இந்தியர்கள் யாரை அடுத்த பிரதமராகக் காண விரும்புகின்றார்கள்?