கோலாலம்பூர் – முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ கனி பட்டேல் (படம்) இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்ற கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டார்.
13 ஆண்டுகளாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய கனி பட்டேல் கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டான்ஸ்ரீ அபாண்டி அலி அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் மீண்டும் வழக்கறிஞர் பணிக்குத் திரும்புவதற்காக 9 மாதங்கள் பயிற்சியை முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் கே.ரகுநாத்தின் கீழ் பெற்றார் கனி பட்டேல். அதன் பின்னர் இன்று வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்தோபர் லியோங் கனி பட்டேலை வழக்கறிஞராக அனுமதிக்கும் பரிந்துரையை நீதிமன்றத்தில் முன்மொழிந்தார்.
நீதிபதி டத்தோ ஜோன் லூயிஸ் ஓ’ஹாரா முன்னிலையில் கனி பட்டேல் வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டார்.