Home Featured கலையுலகம் “பைரவா”-வுக்காக அஞ்சி ஒதுங்கிய “சிங்கம்”

“பைரவா”-வுக்காக அஞ்சி ஒதுங்கிய “சிங்கம்”

845
0
SHARE
Ad

bairavaa-poster

சென்னை – உலகம் எங்கும் உள்ள தமிழ்ப்பட இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் சூர்யா நடிப்பில் வெளிவரப்போகும் “சிங்கம் 3′. இயக்குநர் ஹரியின் கைவண்ணத்தில் மலரும் இந்தப் படம் டிசம்பர் 23-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தத் தேதியில் வெளிவரவில்லை.இன்னும் தீராமல் இருக்கும் புதிய ரூபாய் நோட்டுக்கள் பிரச்சனை, தட்டுப்பாடு காரணமாக படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மிகப் பெரிய பொருட்செலவில் சிங்கம் 3 உருவாகியிருப்பதால், படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றார்கள். தவறான சூழலில் வெளியிடுவதால் படத்தின் வசூல் எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது என்பதில் தயாரிப்பாளர்கள் கவனமுடன் இருக்கின்றார்கள்.

#TamilSchoolmychoice

Singam-3-HD-posters

இந்நிலையில் படம் எதிர்வரும் பொங்கல் திருநாளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் நாளில் வெளியாகும் மற்றொரு மிகப் பெரிய படம் விஜய் நடித்த ‘பைரவா’. இன்னொரு பெரிய படத்துடன் மோதுவதால் இரண்டு படங்களின் வசூலுமே பாதிக்கப்படலாம் என்பதால் சிங்கம் 3 படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதையும் ஒத்திவைத்து விட்டனர்.

நடிகர் விஜய்யும், சூர்யாவும் ஒன்றாகக் கல்லூரியில் படித்தவர்கள் என்பதோடு, நல்ல நட்புடன் இருப்பவர்கள். இதன் காரணமாக, விஜய் நடித்த ‘பைரவா’ படத்துடன் மோதுவதைத் தவிர்த்து விட்டு, பைரவா வெளியீட்டுக்கு சுமார் இரண்டு வாரங்கள் கழித்து ஜனவரி 26-ஆம் தேதி சிங்கம் 3 படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர்களான ஸ்டுடியோ கிரீன் முடிவு செய்துள்ளார்கள்.

ஜனவரி 26, வியாழக்கிழமை, இந்தியக் குடியரசு தின விடுமுறை என்பதாலும் அதைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறைகள் காரணமாகவும், சிங்கம் 3 வசூலில் சாதனை படைக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.