Home Featured உலகம் இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்தவர்களில் இருவர் இந்தியர்கள்

இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்தவர்களில் இருவர் இந்தியர்கள்

1278
0
SHARE
Ad

sushma

இஸ்தான்புல் – புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இஸ்தான்புல் இரவு விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மரணமடைந்தவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்த தகவலில் “துருக்கியிலிருந்து ஒரு கெட்ட செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்தவர்களில் இருவர் இந்தியர்கள். இந்தியத் தூதர் தற்போது இஸ்தான்புல் நோக்கி விரைகிறார்” என சுஷ்மா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

sushma-swaraj

மரணமடைந்த இருவரில் அபிஸ் ரிஸ்வி என்பவர் முன்னாள் இந்திய நாடாளுமன்ற மேலவையின் (ராஜ்யசபா) உறுப்பினரின் மகனாவார் என்றும் மற்றொருவர் குஷி ஷா என்றும் சுஷ்மா மேலும் தெரிவித்துள்ளார்.