Home Featured நாடு ‘எங்கள் பிள்ளைகள் தமிழில் பேச வேண்டும்’ – தாயார் நோரிலாமின் விருப்பம்!

‘எங்கள் பிள்ளைகள் தமிழில் பேச வேண்டும்’ – தாயார் நோரிலாமின் விருப்பம்!

982
0
SHARE
Ad

malay-boyபாகோ – இந்த ஆண்டு, நாட்டிலேயே முதலாம் ஆண்டில் ஒரே ஒரு மாணவரைக் கொண்ட ஒரே பள்ளியாக, பாகோவில் உள்ள லாடாங் பான் ஹெங் தமிழ்ப் பள்ளி செயல்படவுள்ளது.

முகமட் ஹாரிஸ் அஸ்யராஃபுடன் சேர்த்து மொத்தம் 5 மலாய் மாணவர்கள் அந்தத் தமிழ்ப் பள்ளியில் படிக்கின்றார்கள்.

11 ஆசிரியர்களைக் கொண்ட அப்பள்ளியில், மொத்தம் 11 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

#TamilSchoolmychoice

முகமட் ஹாரிசின் தாயார் நோரிலாம் அப்துல் அசிசி (வயது 35) கூறுகையில், “இந்த ஆண்டு எனது மகன் (முகமட் ஹாரிஸ்) தனது சகோதரி நூருல் அட்ரியெனா சியாஃபிகா மொகமட் தாசிலி (வயது 10) மற்றும் சகோதரர் ராசியெஃப் மொகமட் தாசிலி (வயது 12) ஆகியோருடன் பள்ளிக்கு செல்ல விரும்புகிறார்.அவர்கள் இருவரும் இப்பள்ளியில் நான்காம் ஆண்டும், ஆறாம் ஆண்டும் படிக்கின்றார்கள்”

“என்னுடைய மூத்த மகன் தற்போது மேல்நிலைப் பள்ளி செல்கிறார். அவரும் இந்தப் பள்ளியில் படித்தவர் தான்”

“எங்கள் பிள்ளைகள் புதிய மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று என் கணவரும், நானும் விரும்புகின்றோம். அவர்கள் தமிழ் பேசினால் நாங்கள் மிகவும் பெருமைப் படுவோம்” என்று நோரிலாம் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் பிள்ளைகள் அனைவரும் தமிழில் பேசிக் கொண்டால் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் நோரிலாம் குறிப்பிட்டுள்ளார்.

“பனை எண்ணெய் தோட்டத்தில் உள்ள சமுதாயத்துடன் நாங்கள் நெருங்கமான உறவுடன் வாழ்ந்து வருகின்றோம். மற்ற இனங்களுடன் கலப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும் நோரிலாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லாடாங் பான் ஹெங் தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.சுப்ரமணியம் கூறுகையில், இதுவரையில் இரண்டு மலாய் குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை எங்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

படம்: நன்றி (The Star)