புதுடெல்லி – உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகள் இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி டெல்லியில் இன்று தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அதன் படி, உத்தரபிரதேசத்தில், 403 தொகுதிகளிலும், பஞ்சாப்பில் 117 தொகுதிகளிலும், உத்தரகாண்ட்டில் 71 தொகுதிகளிலும், கோவாவில் 40 தொகுதிகளிலும், மணிப்பூரில் 60 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி விபரங்கள் பின்வருமாறு:-
கோவா (ஒரே கட்டமாக நடைபெறுகிறது)
வேட்பு மனு தொடக்கம் – ஜனவரி 11, 2017
வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் – ஜனவரி 18, 2017
வேட்பு மனு பரிசீலனை நாள் – ஜனவரி 19, 2017.
வேட்பு மனுவை திரும்பபெறும் நாள் – ஜனவரி 21, 2017.
தேர்தல் நடைபெறும் தேதி – பிப்ரவரி 04, 2017
பஞ்சாப்பில் ஒரே கட்டத் தேர்தல்,
வேட்பு மனு தொடக்கம் – ஜனவரி 11, 2017
வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் – ஜனவரி 18, 2017
வேட்பு மனு பரிசீலனை நாள் – ஜனவரி 19, 2017.
வேட்பு மனுவை திரும்பபெறும் நாள் – ஜனவரி 21, 2017.
தேர்தல் நடைபெறும் தேதி – பிப்ரவரி 04, 2017
உத்தரகாண்ட்
வேட்பு மனு தொடக்கம் – ஜனவரி 20, 2017
வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் – ஜனவரி 27, 2017
வேட்பு மனு பரிசீலனை நாள் – ஜனவரி 28, 2017.
வேட்பு மனுவை திரும்பபெறும் நாள் – ஜனவரி 30, 2017.
தேர்தல் நடைபெறும் தேதி – பிப்ரவரி 15, 2017.
மணிப்பூரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
38 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது
வேட்பு மனு தொடக்கம் – பிப்ரவரி 8, 2017
வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் – பிப்ரவரி 15, 2017
வேட்பு மனு பரிசீலனை நாள் – பிப்ரவரி 16, 2017.
வேட்பு மனுவை திரும்பபெறும் நாள் – பிப்ரவரி 18, 2017.
தேர்தல் நடைபெறும் தேதி – மார்ச் 4, 2017.
இரண்டாவது கட்டம் 22 தொகுதிகளுக்கு
வேட்பு மனு தொடக்கம் – பிப்ரவரி 11, 2017
வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் – பிப்ரவரி 18, 2017
வேட்பு மனு பரிசீலனை நாள் – பிப்ரவரி 28, 2017.
வேட்பு மனுவை திரும்பபெறும் நாள் – மார்ச் 02, 2017.
தேர்தல் நடைபெறும் தேதி – மார்ச் 8, 2017.
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 15-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 23-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மார்ச் 4-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் மார்ச் – 8 தேதியும் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கையானது மார்ச் மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.