கோலாலம்பூர் – தன் நடிப்பாலும், அரசியல் புரட்சியாலும் இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிலைத்து நிற்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். தமிழ் மக்கள் ஒழுக்கத்திற்கும், சிந்தனைக்கும், மாறுதலுக்கும் பல கருத்துக்களைத் தன் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழியாக உணர்த்தியிருக்கிறார்.
கருத்துக்களை திரைப்படங்களின் வழி வழங்கியதோடு மட்டுமின்றி, தன் நிஜ வாழ்க்கையிலும் செயல் படுத்தியவர் மக்கள் திலகம்.
மக்களை அதிகம் ஈர்த்த இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகவும், தமிழகம் மறக்க முடியாத அரசியல்வாதியாகவும் விளங்கிய எம்.ஜி.ஆரின் 100ஆவது பிறந்த நாள் எதிர்வரும் ஜனவரி 17-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அஸ்ட்ரோ வெள்ளித்திரை (202) அலைவரிசையில் ஜனவரி மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 மணிக்கு எம்.ஜி.ஆர் நடித்த புகழ்பெற்ற திரைப்படங்களை ஒளியேறப் போகின்றது.
அஸ்ட்ரோ வெள்ளித்திரையில் இந்த மாதம் கீழ்க்காணும் தேதிகளில் காலை 10.00 மணிக்கு ஒளியேறப் போகும் மணிக்கு எம்.ஜி.ஆரின் சிறப்புத் திரைப்படங்கள்:
08.01.2017 ஞாயிறு :- குடியிருந்த கோயில்
15.01.2017 ஞாயிறு :- ஆயிரத்தில் ஒருவன்
17.01.2017 செவ்வாய் :- எங்க வீட்டுப் பிள்ளை
(பிறந்த நாள் சிறப்புத் திரைப்படம்)
22.01.2017 ஞாயிறு :- ஆசை முகம்
29.01.2017 ஞாயிறு :- என் அண்ணன்