Home Featured நாடு தலைமைச் செயலாளரிடமிருந்து மேலும் 2.6 மில்லியன் சொத்துகள் கைப்பற்றப்பட்டன

தலைமைச் செயலாளரிடமிருந்து மேலும் 2.6 மில்லியன் சொத்துகள் கைப்பற்றப்பட்டன

686
0
SHARE
Ad

mohd-arif-ab-rahman-datuk-rural-regional-min-sec-gen

கோலாலம்பூர் – மலேசியாவின் கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமட் அரிப் அப்துல் ரஹ்மான் (படம்) மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் தரப்பிலிருந்து மேலும் 2.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கக் கட்டிகள், ஆஸ்திரேலிய, ஈரோ பண நோட்டுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை (4 ஜனவரி)  கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இப்போது கூடுதலாக இந்த 2.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய சொத்துகள் அவர்கள் தரப்பிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.