சென்னை – அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் உறவினரும் அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவருமான டிடிவி. தினகரனுக்கு (படம்) அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு இலாகா விதித்த 28 கோடி ரூபாய் அபராதத்தை இன்று வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் மறு-உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.
சசிகலாவின் அக்காள் மகனான தினகரன் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமாவார். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நெருக்கமான அரசியல் வளையத்துக்குள் வந்த தினகரன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்போது மீண்டும் சசிகலாவுடன் நெருக்கமாக இயங்கி வருகின்றார் தினகரன்.
அண்மையில் அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு தினகரன் மீதான இந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியாகப் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.