Home Featured நாடு டத்தோ சரவணன் உட்பட பிரவாசி பேராளர்கள் சென்ற மாஸ் விமானம் இயந்திரக் கோளாறால் பாதிப் பயணத்தில்...

டத்தோ சரவணன் உட்பட பிரவாசி பேராளர்கள் சென்ற மாஸ் விமானம் இயந்திரக் கோளாறால் பாதிப் பயணத்தில் திரும்பியது!

799
0
SHARE
Ad

Saravanan - MIC -கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை பெங்களூரில் நடைபெறும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் உட்பட பல மலேசியப் பேராளர்கள் சென்ற மாஸ் விமானம் பாதிப் பயணத்தை முடித்த நிலையில் இயந்திர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பி பத்திரமாகத் தரையிறங்கியது.

இதுகுறித்து செல்லியல் ஊடகம், டத்தோ எம்.சரவணனிடம் நேரடியாகத் செல்பேசி வழி தொடர்பு கொண்டபோது, “இன்று காலை 9.00 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மாஸ் விமானம் ஏறத்தாழ 2 மணி நேர பயணத்திற்குப் பின்னர், பெங்களூருவில் தரையிறங்குவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரமே இருந்த நிலையில் இயந்திர தொழில்நுட்பக் கோளாறைச் சந்தித்தது. அதன் காரணமாக, மீண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குத் திரும்பியது” என்று கூறினார்.

விமானம் பத்திரமாக கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் செல்லவிருந்த டத்தோ சரவணன் உள்ளிட்ட பிரவாசி மாநாட்டுக்கான மலேசியப் பேராளர்கள் அனைவரும் இன்று மாலை 4.00 மணியளவில் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்ற மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மாலை 4.00 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து புறப்படும் மாஸ் விமானத்தில் ஏறி விட்டதாகவும், செல்லியலிடம் உறுதிப்படுத்திய சரவணன், நாளை பெங்களூரில் தொடங்கும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதை உறுதி செய்தார்.