Home இந்தியா இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும்- ஜெயலலிதா

இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும்- ஜெயலலிதா

574
0
SHARE
Ad

jeyaaசென்னை, மார்ச்.21- தமிழக மீனவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திய இலங்கையை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் மூலம்முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்ட  இரு சம்பவர்களையும், அவையும் தமிழகப் பகுதியான பாக் ஜல சந்தியில் நடைபெற்றதையும் அக்கடிதத்தில் பிரதமரின் கவனத்திற்கு ஜெயலலிதா கொண்டு சென்றுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சென்ற 8 மீனவர்களும் ,நாகப்பட்டினத்தைச்  சேர்ந்த 6 மீனவர்களும் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்தியா கோழைத்தனமாக இருக்கக்கூடாது

மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால் தான் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கொலைவெறியோடு தாக்குதல் நடத்தும், காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என தமது அதிருப்தியை அதில் வலியறித்தியிருந்தார்.

இந்த வெளிப்படையான, நாகரிகமற்ற தாக்குதலுக்குப் பிறகும் இந்தியா கோழைத்தனமான நிலையில் இருக்க முடியாது என்றும்கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே நான்கு முறை தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர்என்பதையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

ஆகவே, இதுபோன்ற கொடூரத் தாக்குதலை நிறுத்தவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமரை, முதல்வர் ஜெயலலிதா  அக்கடிதத்தில்வற்புறுத்தியைள்ளார்.