Home வணிகம்/தொழில் நுட்பம் பேங்க் நெகாராவின் துணை கவர்னராக சுக்டேவ் சிங் நியமனம்.

பேங்க் நெகாராவின் துணை கவர்னராக சுக்டேவ் சிங் நியமனம்.

806
0
SHARE
Ad

Sukdev-Singh-BNM-Deputy-Governorகோலாலம்பூர், மார்ச் 21 – மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் துணை தலைவர்களில் (கவர்னர்) ஒருவராக இந்தியரான சுக்டேவ் சிங் (படம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதே வேளையில் தற்போது துணை கவர்னர்களில் ஒருவராக இருந்துவரும் முகமட் இப்ராகிம் மீண்டும் அதே பதவிக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முகமட் அனைத்துலக நிதி கையிருப்பு, பணச் சந்தை, அந்நிய பணமாற்று செயல்பாடுகள், நிதித் துறையின் கட்டுப்பாட்டு செயலாக்க முறைகள் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், பணவிவகாரம், பொருளாதார துறைகளில் சுக்டேவ் கவனம் செலுத்துவதோடு, பேங்க் நெகாராவின் நிர்வாக அமைப்பு முறையை மேம்படுத்தும் பணியிலும் கவனம் செலுத்துவார். தற்போது உதவி கவர்னராக இருந்து வரும் சுக்டேவ், நிதிச் சந்தைக்கான குழுவின் உறுப்பினர் என்பதோடு, நிதிச் சந்தை கொள்கை வகுக்கும் குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார்.

இந்த நியமனங்களோடு, பேங்க் நெகாரா இனி மூன்று துணை கவர்னர்களைக் கொண்டிருக்கும். அதன் மற்றொரு கவர்னர் தோர் ஷம்சியா முகமட் யூனுஸ் ஆவார்.