பெங்களூர் – பெங்களூரில் நடைபெற்று வரும் பிரவாசி பாதிய திவாஸ் 2017 மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அண்மையில் புத்தாண்டு தினத்தன்று பெங்களூர் எம்ஜி ரோட்டில் பெண்கள் பலர் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளானது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, அச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சித்தராமையா குறிப்பிட்டார்.
நேரடிச் செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்