Home Featured தமிழ் நாடு ஒரே மேடையில் வெங்கையா நாயுடு-சந்திரபாபு நாயுடு-பினராய் விஜயன்-ஸ்டாலின்!

ஒரே மேடையில் வெங்கையா நாயுடு-சந்திரபாபு நாயுடு-பினராய் விஜயன்-ஸ்டாலின்!

708
0
SHARE
Ad

india-today-conclave-south-cms

சென்னை – இங்கு இன்று செவ்வாய்க்கிழமை, இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்தியா டுடே பத்திரிக்கைக் குழுமத்தின் கருத்தரங்கில் பாஜகவின் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வர் பினராய் விஜயன், ஆகியோருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.

அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மேடையில் குத்து விளக்கேற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று தொடங்கின.

#TamilSchoolmychoice

முதல் அங்கமாக வெங்கையா நாயுடுவுடன் நடத்தப்பட்ட கேள்வி பதில் சந்திப்பில், முதலமைச்சர் பன்னீர் செல்வம் – அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த வெங்கையா நாயுடு, அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் இருப்பினும், அதிமுக கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்ற முறையில் பாஜக அரசாங்கம் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து தமிழ் நாட்டு நலன்களுக்காக செயல்படும் என்றும் கூறினார்.

“நாங்கள் தமிழ்நாட்டின் நண்பர்கள். அந்த மாநில மக்களின் நலன்களைப் பாதுகாப்போம்” என்றும் வெங்கையா நாயுடு உறுதியளித்தார்.

chandrababu-naidu-venkaiah-naidu

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…