Home இந்தியா இந்தியப் பொதுத் தேர்தல் : கருத்துக் கணிப்புகள் பிழையானதால் அழுத தேர்தல் கணிப்பு நிறுவன இயக்குநர்!

இந்தியப் பொதுத் தேர்தல் : கருத்துக் கணிப்புகள் பிழையானதால் அழுத தேர்தல் கணிப்பு நிறுவன இயக்குநர்!

263
0
SHARE
Ad

புதுடில்லி : ஜூன் 1-ஆம் தேதி கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்ட அன்று இந்தியா டுடே தொலைக்காட்சியில் மை அக்சிஸ் என்ற தேர்தல் கணிப்பாய்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் குப்தா உற்சாகமாக, பாஜக தனியாகவோ கூட்டணியாகவோ 350 தொகுதிகளைப் பெறும் எனக் கணித்தார். ஏறத்தாழ எல்லா ஊடகங்களும் இதே போன்று கணித்தன.

தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதிக்கு மறுநாள் – அதே மை அக்சிஸ் நிர்வாக இயக்குநர் இந்தியா டுடே தொலைக்காட்சி செய்தியாளர்களால் மீண்டும் அழைக்கப்பட்டு, எங்கே தவறு நடந்தது கூறுங்கள் எனக் கேட்க, விளக்கிக் கொண்டே வந்த அந்த மனிதர் ஒரு கட்டத்தில் அழுதே விட்டார். தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் பின்னர் அவருக்கு ஆறுதல் கூறினர்.

தொலைக்காட்சி ஊடகங்களின் அழுத்தங்கள், ஆளும் பாஜக அரசின் பகைமையை ஏன் பெற வேண்டும் என்பது போன்ற காரணங்களால் இந்த முறை கருத்துக் கணிப்புகள் ஒரு சார்பாக இருந்தன. இரண்டு தனிநபர்களின் கணிப்புகள் மட்டும் ஏறத்தாழ சரியாக இருந்தன. அவர்களின் கணிப்புகளுக்கு தொலைக்காட்சிகள் முக்கியத்துவம் தரவில்லை.

நிர்மலா சீதாராமன் – அவரின் கணவர் பரக்கலா பிரபாகர்
#TamilSchoolmychoice

அவர்களில் ஒருவர் பரக்கலா பிரபாகர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர். பாஜக தனிப் பெரும்பான்மை பெற முடியாது – 250 தொகுதிகளைத் தாண்டாது என்றார். மற்றொருவர் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர் யோகேந்திர யாதவ். குறைந்த பட்சம் 220 தொகுதிகளை பாஜக பெறும். அதிகபட்சமாகப் போனால் 250 தொகுதிகள் வரை கிடைக்கும். அதற்கு மேல் போகாது என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

யோகேந்திர யாதவ்

இறுதியில் பாஜக 240 தொகுதிகளை மட்டுமே வெற்றி கொண்டது. கருத்துக் கணிப்புகள் நடத்தும் நிறுவனங்களுக்கு மக்கள் கொடுத்த மறக்க முடியாத அடியாக – படிப்பினையாக – மக்களின் வாக்களிப்புகள் இந்த முறை அமைந்துவிட்டன.