Home இந்தியா பாஜக 361 முதல் 401 எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் – இந்தியா டுடே கணிப்பு

பாஜக 361 முதல் 401 எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் – இந்தியா டுடே கணிப்பு

253
0
SHARE
Ad

புதுடில்லி : ஜூன் 4-ஆம் தேதி இந்தியப் பொதுத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவரவிருக்கும் நிலையில் நேற்று சனிக்கிழமை (ஜூன் 1) இறுதியான 7-வது கட்ட வாக்களிப்பு நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை பல ஊடகங்களும், தேர்தல் கணிப்பாய்வு நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் முன்னணி ஊடகமான இந்தியா டுடே ஏக்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக குறைந்த பட்சம் 361 தொகுதிகளையும் அதிக பட்சமாக 401 தொகுதிகளையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோடி 3-வது தவணையாக மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 3 தவணைகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் என்ற சாதனையை இதன் மூலம் மோடி படைப்பார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா கூட்டணி குறைந்த பட்சமாக 131 தொகுதிகளைப் பெறும் என்றும் அதிகபட்சமாக 166 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் இந்தியா டுடே கணித்துள்ளது.