Home நாடு 4 முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ரிங்கிட் பற்றுச் சீட்டு! மற்றவர்களுக்கு 100 ரிங்கிட்!

4 முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ரிங்கிட் பற்றுச் சீட்டு! மற்றவர்களுக்கு 100 ரிங்கிட்!

429
0
SHARE
Ad
புத்தகக் கண்காட்சியை அன்வார் திறந்து வைத்தபோது…

கோலாலம்பூர் : மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நான்காம் வகுப்பு மற்றும் அதற்கு மேலே உள்ள மாணவர்களுக்கும், இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வி மட்டுமே அல்லாமல் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் உள்ளவர்களுக்கும் RM100 மதிப்பிலான புத்தகப் பற்றுச் சீட்டுகள் (கூப்பன்கள்) வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த புதிய முயற்சியில், புத்தகங்களை வாங்குவதற்கான வழிகாட்டுதல்களுடன் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது கல்வி அமைச்சு இந்த அறிவிப்பு குறித்து சில விளக்கங்களைத் தந்துள்ளது. 4-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 50 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச் சீட்டு மட்டுமே வழங்கப்படும். முதலாம் படிவம் முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் அனைத்து இன மாணவர்ளுக்கும் 100 ரிங்கிட் மதிப்பிலான புத்தகங்களுக்கான பற்றுச் சீட்டு வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

இந்த பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அல்லது, நம் நாட்டின் முன்னேற்றம் கருதி இலக்கவியல் (டிஜிட்டல்) தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புத்தகங்களை வாங்குவதற்காகவும் பயன்படுத்தலாம்.

தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றுவரும் கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி (Kuala Lumpur International Book Fair-KLIBF) 2024-இன் துவக்க விழா கடந்த மே 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டபோது அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், உயர் கல்வி அமைச்சர் சாம்ரி அப்துல் காதிர் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மேலும், ஃபட்லினா மற்றும் சாம்ரி ஆகியோரிடம், புத்தகக் கூப்பன்களை விரைவாகப் பகிர்ந்தளிப்பதற்கான சிறந்த நடைமுறையை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்.

KLIBF மே 24 முதல் ஜூன் 2 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

குறுகிய கால அறிவிப்பாக இருந்தபோதிலும், புத்தகக் கூப்பன்களை பகிர்ந்தளிக்க ஃபட்லினாவுடன் இணைந்து சிறந்த நடைமுறையைக் காண்பேன் என்று சாம்ரி கூறினார்.

“இந்த அறிவிப்பு, குறிப்பாக இளைய தலைமுறைக்கு, மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இதை நாங்கள் செய்து முடிப்போம், ஏனெனில் இது இரண்டு விஷயங்களை நிரூபிக்கிறது. முதலில், பிரதமர் அறிவுக் கலாசாரத்தின் மீது அக்கறை கொண்டுள்ளார், இரண்டாவதாக, நெருக்கடியான நிதிநிலை மற்றும் பொருளாதார சவால்களில் கூட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,” என்று அவர் கூறினார்.