Home Featured கலையுலகம் இந்தி நடிகர்கள் அர்ஜூன் ரம்பால் – ஜேக்கி ஷரோப் பாஜகவில் இணைகின்றனர்!

இந்தி நடிகர்கள் அர்ஜூன் ரம்பால் – ஜேக்கி ஷரோப் பாஜகவில் இணைகின்றனர்!

714
0
SHARE
Ad

arjun-rampal-hindi-actor

மும்பை – பிரபல இந்திப் பட நடிகர்கள் அர்ஜூன் ரம்பால் (படம்) மற்றும் ஜேக்கி ஷரோப் ஆகிய இருவரும் பாஜகவில் இணைவதாக இன்று அறிவித்தனர்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேசத் தேர்தலில் இவர்கள் இருவரும் பாஜகவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபடுவர்.

#TamilSchoolmychoice

அர்ஜூன் ரம்பால் பல படங்களில் கதாநாயகனாகவும், இரண்டாம் நிலை கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கின்றார்.

jackie_shroff_ஜேக்கி ஷரோப்…

மற்றொரு நடிகரான ஜேக்கி ஷரோப் நீண்ட காலமாக இந்திப் படங்களில் முன்னணி நடிகராக நடித்து வருபவர். ஆரம்ப காலங்களில் விளம்பரங்களுக்கான ஆணழகனாகத் தோன்றியவர் பின்னர் ‘ஹீரோ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றார்.

அவரது மகன் டைகர் ஷரோப்பும் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.