Home Featured உலகம் காபூல் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி! 70 பேர் காயம்!

காபூல் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி! 70 பேர் காயம்!

963
0
SHARE
Ad

afghanistan-parliament-buildingகாபூல் – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு (மேலே – கோப்புப் படம்) அருகில் நிகழ்ந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்தனர்.

தாலிபான் இயக்கம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்திருக்கின்றது.

தாக்குதலில் மரணமடைந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.