Home Featured தமிழ் நாடு இந்தியா முழுவதும் பொங்கல் கட்டாய விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் பொங்கல் கட்டாய விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு

898
0
SHARE
Ad

Ponggalசென்னை – தமிழக அரசு தந்த நெருக்குதல், மாநிலம் முழுவதும் எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து, பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பொங்கல் விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும்.

இதற்கு முன்னர் வந்த அறிவிப்பின்படி, வரையறுக்கப்பட்ட பட்டியலில் பொங்கலை மத்திய அரசு சேர்த்திருந்தது. இதனால் மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமே விடுமுறை எடுக்க முடியும்.

ஆனால், இப்போது கட்டாய விடுமுறைப் பட்டியலில் சேர்த்துள்ளதால், இந்தியா முழுவதும் பொங்கல் விடுமுறையாக அனுசரிக்கப்படும்.