Home Featured நாடு மு.க.ஸ்டாலினுடன் டத்தோ சரவணன் சந்திப்பு

மு.க.ஸ்டாலினுடன் டத்தோ சரவணன் சந்திப்பு

1108
0
SHARE
Ad

saravanan-stalin-jan-2017சென்னை – பெங்களூருவில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் சென்னை வந்தடைந்த மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் நேற்று செவ்வாய்க்கிழமை (10 ஜனவரி) திமுக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

saravanan-stalin-welcomeஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவிக்கும் சரவணன்….

அந்தச் சந்திப்பின் போது, தமிழக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு, காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.

#TamilSchoolmychoice

திமுகவின் புதிய செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளையும் சரவணன் தெரிவித்துக் கொண்டார்.

saravanan-stalin-thiagarajanசந்திப்பின்போது ஸ்டாலினுடன் அளவளாவும் சரவணன் – அருகில் கராத்தே தியாகராஜன்….

saravanan-stalin-meet-pressஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் சரவணன் – அருகில் சேகர் பாபு (இடது – தாடியுடன் இருப்பவர்) மற்றும் கராத்தே தியாகராஜன் (வலது)