Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம், பெங்களூரில் போராட்டம்!

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம், பெங்களூரில் போராட்டம்!

634
0
SHARE
Ad

jallikattu345-12-1484206325சென்னை – ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இளைஞர்கள் பலர் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் பெங்களூரில் வாழும் தமிழர்களில் ஒரு தரப்பு இன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், போராட்டம் நடைபெறும் இடங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் பொறுக்கிகள் தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கிறார்கள் என்ற அர்த்தத்தில் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியைக் கண்டித்து, கோவையில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது.