ஜெலுதோங், தஞ்சோங் பூங்கா மற்றும் செபராங் ஜெயா ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 8.45 மணியளவில் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டத்தை அப்பகுதிவாசிகள் உணர்ந்தனர். அந்த அதிர்வு சுமார் 5 நிமிடங்கள் நீடித்ததாகவும், அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
மேலும், தீபகற்ப மலேசியாவில் இன்னும் பல மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments