இராமாவரம் தோட்ட இல்லத்தில்தான் எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதிக் காலத்தைக் கழித்தார். இராமாவரம் தோட்டத்திற்கு இன்று வருகை தந்த சசிகலா, அங்கு அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்தார்.
முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார் (மேலே படம்).
பின்னர் இராமாவரம் தோட்டத்தில் இயங்கி வரும் காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்கு வருகை தந்து அங்கு பயிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கினார்.
அங்குள்ள மாணவர்களுக்கு விருந்துபசரிப்பு நடத்தியதோடு, அவர்களோடு சேர்ந்து விருந்திலும் சசிகலா பங்கு கொண்டார்.