Home Featured இந்தியா அகிலேஷூக்கு சைக்கிள் சின்னம் – காங்கிரசோடு ‘கை’ கோர்க்கிறார்!

அகிலேஷூக்கு சைக்கிள் சின்னம் – காங்கிரசோடு ‘கை’ கோர்க்கிறார்!

934
0
SHARE
Ad

Akhilesh-Yadav1புதுடில்லி – முலாயம் சிங் தலைவராக இருந்த சமஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அவரது மகனும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நடப்பு முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தலைமையிலான பிரிவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமஜ்வாடி கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான சைக்கிள் சின்னத்தைப் பெறுவதில் அகிலேஷின் தந்தை முலாயம் சிங் தோல்வி கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளார் அகிலேஷ். இந்தக் கூட்டணியில் மேலும் இரண்டு மாநிலக் கட்சிகள் இணைந்துள்ள நிலையில், நான்கு கட்சிக் கூட்டணியாக உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறது அகிலேஷ் தலைமையிலான கூட்டணி.

#TamilSchoolmychoice

பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், மாயாவதி தலைமையில் மற்றொரு கூட்டணியும் சட்டமன்றத் தேர்தலில் மோதுகின்றன.

அகிலேஷ்-ராகுல் கூட்டணி, இருவருமே வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றது. தந்தை மகன் போராட்டத்தால், ஆட்சியை இழக்கும் அபாயத்தில் இருக்கிறது சமஜ்வாடி கட்சி.

அதே போன்று, தொடர்ந்து ஏற்பட்டு வரும் அரசியல் சரிவால், அதலப் பாதாளத்தில் கிடக்கின்றது காங்கிரஸ். எப்படியாவது கூடுதல் தொகுதிகளை வென்றால் போதும் என்ற நிலையில், உத்தரப் பிரதேசத்தைத் தனித்துக் கைப்பற்ற முயற்சி செய்யாமல், முதலமைச்சர் பதவியை அகிலேஷூக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, உத்தரப் பிரதேசத்தில் போட்டியில் இறங்குகிறது காங்கிரஸ்.