சென்னை – தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், தமிழர் கலாசாரத்தை எண்ணி பெருமை கொள்கிறோம் என்றும் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தற்போதைய செய்திகள்:
1. அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று சனிக்கிழ்மை சென்னை வருகிறார்.
2. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிருந்து காளையை நீக்கம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.
3. அவசரசட்டம் இயற்றிய பின் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அலங்காநல்லூர் வாடிவாசல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
4. இளைஞர்களின் அறவழிப் போராட்டம் வெற்றி பெறும் என்று நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5.