Home Featured கலையுலகம் பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்பட்டார்!

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்பட்டார்!

863
0
SHARE
Ad

Sanjay-Leela-Bhansali-

ஜெய்பூர் – பிரபல இந்திப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஒரு குழுவினரால் நேற்று தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவதாஸ், பாஜிராவ் மஸ்தானி போன்ற பிரபலமான வெற்றிப் படங்களை இயக்கியவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ‘பத்மாவதி’ என்ற படத்தை எடுத்து வருகின்றார். இதற்கான படப்பிடிப்புத் தளம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்பூர் நகரிலுள்ள ஒரு கோட்டையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்புத் தளத்தில்தான் ஒரு குழுவினர் உள்ளே நுழைந்து பன்சாலியை தகாத வார்த்தைகளால் விமர்சித்து, தாக்கியும் உள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்காக பல பாலிவுட் நட்சத்திரங்கள் தொடர்ந்து தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பன்சாலி தனது படப்பிடிப்பை இரத்து செய்துவிட்டு, மும்பை திரும்பியுள்ளார்.