Home Featured நாடு காணாமல் போன படகு: மாலுமி, பணியாளர் கண்டுபிடிக்கப்பட்டனர்!

காணாமல் போன படகு: மாலுமி, பணியாளர் கண்டுபிடிக்கப்பட்டனர்!

895
0
SHARE
Ad

கோத்தாகினபாலு – நேற்று சனிக்கிழமை சீனப் புத்தாண்டின் முதல் நாளில், கோத்தா கினபாலுவில் இருந்து சபாவின் கடல் பகுதியில் உள்ள புலாவ் மெங்காலும் தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன உல்லாசப் படகைச் செலுத்திய மாலுமியும், பணியாளர் ஒருவரும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய கடற்பகுதிக்கான அமுலாக்க இலாகா துணை இயக்குநர் கேப்டன் மாரிடிம் ரஹிம் ரம்லி தெரிவித்துள்ளார்.

மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

sabah-missing catamaranகாணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உல்லாசப் படகு இதுதான்…

தஞ்சோங் அரு படகுத் துறையிலிருந்து நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் புலாவ் மெங்காலும் தீவு நோக்கி, 56 கிலோமீட்டர் பயணத்தை இந்த உல்லாசப் படகு தொடக்கியது.

ஆனால், 9.50 மணியளவில் இந்தப் படகு காணாமல் போனதாக படகின் உரிமையாளர் அறிவித்தார்.  இந்தப் படகில் சீனாவின் 28 சுற்றுலாப் பயணிகள் உட்பட மாலுமி ஒருவரும் இரண்டு பணியாளர்களும் இருந்தனர்.

படகு காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 400 சதுர மைல் சுற்றளவில், மலேசியக் கடற்படைக் கப்பல்கள் உள்ளிட்ட கடலோரப் பாதுகாப்புப் படையினர் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.