Home Featured உலகம் பிரான்ஸ் அழகி – மிஸ் யுனிவர்ஸ் பட்டம் சூட்டப்பட்டார்!

பிரான்ஸ் அழகி – மிஸ் யுனிவர்ஸ் பட்டம் சூட்டப்பட்டார்!

1206
0
SHARE
Ad

miss universe-2017-top 3மணிலா – இன்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டுக்கான 65-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஐரிஸ் மிட்டனாரே வெற்றி பெற்றார்.

24 வயதான ஐரிஸ் பிரான்ஸ் நாட்டின் லில்லே என்ற நகரைச் சேர்ந்தவராவார். பல் மருத்துவத் துறையில் பட்டப் படிப்புக்காக தற்போது படித்து வருகின்றார்.

இரண்டாவது வெற்றியாளராக ஹைத்தி நாட்டைச் சேர்ந்த ராக்குவெல் பெலிசியர் வெற்றி பெற்றார். மூன்றாவது நிலையில் கொலம்பியா நாட்டின் அண்ட்ரியா டொவார் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

Miss Universe-finalists-2017இறுதிச் சுற்றுக்குத் தேர்வானஅழகிகளின் அணிவகுப்பு….(படம்: dpa)