Home உலகம் மிஸ் யுனிவர்ஸ் : பிலிப்பைன்ஸ் நாடு 4-வது முறையாக வென்றது

மிஸ் யுனிவர்ஸ் : பிலிப்பைன்ஸ் நாடு 4-வது முறையாக வென்றது

1034
0
SHARE
Ad

பேங்காக் – நேற்று திங்கட்கிழமை இங்கு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் கேத்ரியோனா கிரே வாகை சூடினார். அவரது வெற்றியைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் வெல்வது இது நான்காவது முறையாகும்.

24 வயதான கேத்ரியோனா ஆஸ்திரேலியாவில் விளம்பர அழகியாக (மாடல்) பணியாற்றி வருகிறார்.

66 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அழகிப் போட்டியில் இம்முறை முதன் முறையாக ஒரு திருநங்கை போட்டியாளராகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஸ்பெயினைப் பிரதிநிதித்து 27 வயதான ஏஞ்சலா போன்ஸ் என்ற திருநங்கை இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

தென் ஆப்பிரிக்க அழகியான தமரின் கிரீன் இரண்டாவது இடத்தையும், வெனிசுலா அழகி ஸ்டெபனி குட்டிராஸ் மூன்றாவது இடத்தையும் இந்த அழகிப் போட்டியில் பிடித்தனர்.

நான்காவது முறையாக பிலிப்பைன்ஸ் நாடு இந்த அழகிப் போட்டி பட்டத்தைக் கைப்பற்றுகிறது என்பதோடு, கடந்த மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக இந்தப் பட்டத்தை வெல்லும் நாடு என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.