Home நாடு “அடிப் குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்”- வேதமூர்த்தி

“அடிப் குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்”- வேதமூர்த்தி

845
0
SHARE
Ad

புத்ராஜெயாநவம்பர் 27-ஆம் தேதி, சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் பலத்தக் காயமடைந்து, நேற்று இரவு 9:41 மணியளவில் மரணமுற்ற தீயணைப்பு வீரர், முகமட் அடிப் குடும்பத்தாருக்கு பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி,தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

முகமட் அடிப் ஒரு துணிச்சலான தீயணைப்பு வீரர். அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு சேவை செய்தார். அவரது இந்நிலைக்கு காரணமானவர்களை நீதியின் முன்னால் நிறுத்த காவல் துறையினர் தீவிரமாகவும், இடைவிடாமலும் பணிபுரிந்து வந்தார்கள். முகமட்அடிப்பின் ஆத்மாவுக்காக அனைத்து மலேசியர்களும் பிரார்த்தனை செய்வோம்”, என தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான வேதமூர்த்தி அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

கடந்த 60 ஆண்டுகளாக ஒற்றுமை மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பிய மலேசிய மக்கள் அனைவரும், இந்த இக்கட்டான சூழலில் அடிப்பின் ஆத்மா அமைதிப் பெறவும், அவரது குடும்பத்தாருக்கு ஆதரவாகவும் இருப்போம் எனத் தெரிவித்தார்.