Home நாடு அடிப்பின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும்!

அடிப்பின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும்!

1623
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் நல்லுடல் இன்று காலை 8:50 மணி அளவில், அவரது சொந்த ஊரான கோல கெடாவிலுள்ள, கம்போங் தெபங்காவிற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

கோலாலம்பூர் மருத்துவமனையில் அவரது நல்லுடலுக்குப் தொழுகைகள் செய்தப் பின்பு, காலை 7:55 மணி அளவில் சுபாங் இராணுவ விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அடிப்பின் நல்லுடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா விமான நிலையம் வந்தடைந்தனர். அடிப்பின் நல்லுடல் அவரது சொந்த ஊரில் குடும்பம், உறவினர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சூழ நல்லடக்கம் செய்யப்படும்.