Home Featured நாடு சபா படகு விபத்து : 3 பேர் கைது – படகில் இருந்தது 30 பேர்தான்!

சபா படகு விபத்து : 3 பேர் கைது – படகில் இருந்தது 30 பேர்தான்!

618
0
SHARE
Ad

sabah-boat-கோத்தாகினபாலு – சபா உல்லாசப் படகு விபத்தில் இதுவரை காவல் துறையினர் மூவரைக் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் கடலில் மூழ்கிய அந்தப் படகில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை 30-தான் என்றும் முன்பு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டபடி 31 அல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனப் பயணிகளின் எண்ணிக்கை 27-தான் என்றும் முன்பு வெளிவந்த தகவல்களின்படி 28 அல்ல என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சனிக்கிழமையன்று பூலாவ் மெங்காலும் தீவு நோக்கி சென்று கொண்டிருந்த வழியில் மூழ்கிய உல்லாசப் படகில் 31 பேர் பயணம் செய்தனர். இதுவரை 3 பேர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 26 வயது மாலுமியும், 38 வயது பணியாளரும் கைது செய்யப்பட்டனர். இன்று திங்கட்கிழமை அந்தப் படகின் உரிமை கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக சபா மாநில காவல் துறை ஆணையாளர் (கமிஷனர்) டத்தோ ரம்லி டின் தெரிவித்துள்ளார்.

அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்ட விசாரணையில், அனுமதிக்கப்பட்டதைவிட அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற காரணத்தால் படகு மூழ்கியதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 32 மணி நேரம் அந்தப் பயணிகள் கடலில் தத்தளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மூவர் மரணமடைந்தனர். காணாமல் போன 5 பயணிகளைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. அவர்களின் நால்வர் சீனாவைச் சேர்ந்து சுற்றுலாப் பயணிகள் ஆவர். மற்றொருவர் படகின் பணியாளர் ஆவார்.