வெள்ளிக்கிழமை ஆராவ் நகரிலுள்ள பள்ளி வாசலில் சமய உரையாற்றுவதற்கு ஜாகிர் நாயக், பெர்லிஸ் முப்தியால் அழைக்கப்பட்டுள்ள தகவலை அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக வந்த தகவல் குறித்து ஏற்கனவே ஹிண்ட்ராப் கேள்வி எழுப்பியது என்றும், அதனை மலேசிய அரசாங்கம் மறுத்தது என்பதையும் சுட்டிக் காட்டிய வேதமூர்த்தி, தற்போது ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உள்துறை அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, இந்தியாவில் விசாரணையை எதிர்நோக்கி வரும் ஜாகிர் நாயக்கிற்கு, மலேசியாவில் இடம் கொடுத்து, அவரை சமய உரையாற்ற அழைக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் கேள்விக்குரியதாகியுள்ளதாகவும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.