Home Featured நாடு பாஸ்-பெர்சாத்து கட்சிகள் தேர்தல் உடன்பாடு!

பாஸ்-பெர்சாத்து கட்சிகள் தேர்தல் உடன்பாடு!

622
0
SHARE
Ad

PAS Logo

கோலாலம்பூர் – மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, பாஸ் கட்சிக்கும், பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கும் இடையிலான தேர்தல் உடன்பாட்டுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அந்த இரு கட்சிகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இரண்டு கட்சிகளும் இணைந்து 14-வது பொதுத் தேர்தலில் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன. பாஸ் கட்சியின் சார்பில் அதன் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான் அந்த அறிக்கையில் கையெழுத்திட, பெர்சாத்து கட்சியின் சார்பில் அதன் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் கையெழுத்திட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை இரு தரப்புகளுக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் இந்த முடிவு காணப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்க்கட்சிகள் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியாக ஒருபுறமும், பாஸ், பெர்சாத்து கட்சிகள் இணைந்த கூட்டணி ஒருபுறமுமாக 14-வது பொதுத் தேர்தலைச் சந்திக்கும். இந்த ஏற்பாட்டின் மூலம் ஜசெகவும், பாஸ் கட்சியும் இணைந்து ஒரே கூட்டணியில் இடம் பெறும் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது.