“கஜ துரக ஸகஸ்ரம் கோகுலம் கோடிதானம்
கனக ரஜத பாத்ரம் மேதினி ஸாகாராந்தம்
உபய குல விஷுக்தம் கோடி கன்யா ப்ரதானம்
நஹி நஹி பஹு தானம் அன்னதானம் சமனம்”
ஆயிரம் யானைகள், குதிரைகள், கடல் அளவில் சுவர்ணம், வெள்ளி பாத்திரங்கள், ஒரு இனத்திற்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தல், கோடி கன்னி பெண்களுக்குத் திருமணம் செய்தல் இவையனைத்தும் செய்த புண்ணியம் பசியில் வாடும் ஒரு பக்தனுக்கு அன்னதானம் அளித்த புண்ணியத்திற்கு சமமில்லை என்று இந்த வேத வாக்கியங்களின் மூலம் நாம் அறிகின்றோம்.
100-லிருந்து 200-க்கும் மேற்பட்ட மாமன்ற குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடு சைவ “நாசி லெமாக்” ( Nasi Lemak ) பக்தர்களுக்கு வழங்கப்படும். மாமன்றத்தின் அன்னதான கூடாரம் இரண்டாம் ஆற்றங்கரையான கேடிஎம் வாகன நிறுத்துமிடத்தில் ( KTM Car Park ) அமைந்திருக்கும். வெள்ளிரதம் பத்துமலை திருத்தலத்தை அடைந்து கொடி ஏற்றம் நடைபெற்ற பின்னர் மாமன்றத்தின் அன்னதானம் தொடங்கி சுமார் 24மணி நேரம் நடைபெறும்.
இந்தத் தைப்பூச அன்னதானத்திற்குப் பொதுமக்கள் நிதி அல்லது பொருள் உதவி மூலம் ஆதரவு வழங்க வேண்டும் என மாமன்றத்தின் தைப்பூச அன்னதான ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். நிதி வழங்க விரும்புவோர் (3188811404 Pertubuhan Hindhudharma Malaysia K.L) எனும் பப்ளிக் பேங்க் ( Public Bank ) வங்கிக் கணக்கிற்குப் பணப் பட்டுவாடா செய்யலாம். அதுமட்டுமின்றி இத்தைப்பூச அன்னதான நிகழ்வைச் சிறப்புற நடத்தி முடிக்க தன்னார்வலர்களும் தேவைப்படுகின்றனர். இப்புனித சேவையில் பங்கேற்க பொதுமக்கள் வரவேற்கப்படுகின்றனர். மக்கள் சேவையே மகேசன் சேவை.