Home Featured நாடு அனுவார் மூசாவிடம் 4 மணி நேரம் எம்ஏசிசி விசாரணை!

அனுவார் மூசாவிடம் 4 மணி நேரம் எம்ஏசிசி விசாரணை!

1083
0
SHARE
Ad

MACCபுத்ராஜெயா – அதிகார வரம்பு மீறல் மற்றும் நிதி முறைகேடுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட மாரா (Majlis Amanah Rakyat) தலைவர் அனுவார் மூசாவிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை, புத்ராஜெயாவில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள் சுமார் 4 மணி நேரங்கள் விசாரணை நடத்தினர்.

தன்னிச்சையாகவே தங்களின் அலுவலகம் வந்த அனுவார் மூசா, தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்து ஒத்துழைப்பு அளித்ததாக எம்ஏசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அனுவார் மூசாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக 5 பேருக்கும் பேர் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும் எம்ஏசிசி அறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

கிளந்தான் காற்பந்து சங்க நிதிப்பட்டுவாடா தொடர்பாக அனுவார் மூசா விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, விசாரணை முடிந்து மதியம் 1 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த அனுவார் மூசா, “அவர்கள் கேட்ட அனைத்திற்கும் நான் பதில் சொல்லியிருக்கிறேன். எனவே இப்போது இதில் வழக்கு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அனுவார் தெரிவித்தார்.