Home Featured நாடு “கட்சிக்காக பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த சுந்தர்” பாலகுமாரன் பாராட்டு!

“கட்சிக்காக பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த சுந்தர்” பாலகுமாரன் பாராட்டு!

738
0
SHARE
Ad

palakumaran-mic batu div-secகோலாலம்பூர் – “கட்சியின் நலன் கருதியும், சமுதாயத்துக்காகவும் தனது பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த டத்தோ சுந்தர் சுப்ரமணியத்தின் செயலானது வரவேற்கத்தக்கது. மூத்த தலைவர்கள் பலர் அமைதி காத்த நிலையில் கட்சியின் ஒற்றுமையை மனதில்  நிலைநிறுத்திய இவரின் அரசியல் முதிர்ச்சியை வரவேற்கிறேன்” என மஇகா பத்து தொகுதி செயலாளர் த.பாலகுமாரன் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

நேற்று செல்லியலுக்கு வழங்கிய செல்பேசி வழியான பேட்டியில், டத்தோ சோதிநாதன்,டத்தோ ஹென்றி, டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோர் கட்சியில் இணைவதையும், மத்திய செயலவையில் நியமிக்கப்படுவதையும் டத்தோ சுந்தர் சுப்ரமணியம் வரவேற்றிருந்தார். அவர்கள் மத்திய செயலவையில் நியமனம் பெறுவதில் இடையூறுகள் இருந்தால், அதற்காக தனது நியமன மத்திய செயலவை உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தனது நியமன அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு முழு உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் எனவும், இதன் தொடர்பில் அவருக்கு நெருக்குதல்கள் தரப்படக்கூடாது என்றும் சுந்தர் தனது பேட்டியில் வலியுறுத்தியிருந்தார்.

SUNTHERசுந்தர் சுப்ரமணியம்….

#TamilSchoolmychoice

சுந்தரின் கருத்துகள் தொடர்பில் தொடர்பில் நேற்று பாலகுமாரன் வெளியிட்ட அறிக்கையில், “கட்சியில் குறைந்த காலமே சேவையில் இருந்தவர் என்றாலும் அவரது சிந்தனை, அனுபவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. அதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்” என்றும் கூறினார்.

“கட்சி ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே நம்மால் சமுதாயத்தை கவனிக்க முடியும். அந்த வகையில் நாம் கட்சியின் ஒற்றுமையை மனதில் நிறுத்தி செயல்படுவோம்” என்றும் பாலகுமாரன் மேலும் கேட்டுக் கொண்டார்.

“பதவிக்காகவும், பட்டத்துக்காகவும் மட்டும் கட்சியில் இல்லாமல் கட்சியின் ஒற்றுமைக்காகவும், அதனை பலப்படுத்தும் நோக்கிலும் நமது சிந்தனை இருப்பதை உறுதி செய்வோம்” எனவும் பாலகுமாரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.