Home Featured நாடு “சசிகலா முதல்வர் – மலேசிய உறவுகளை வலுப்படுத்தும்” – சந்திரசேகர் சுப்பையா கூறுகிறார்!

“சசிகலா முதல்வர் – மலேசிய உறவுகளை வலுப்படுத்தும்” – சந்திரசேகர் சுப்பையா கூறுகிறார்!

684
0
SHARE
Ad

Chandrasekar Suppiah Featureகோலாலம்பூர் – அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா நேற்று தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பிரபல தொழிலதிபரும், மஇகா பிரமுகருமான டத்தோ சந்திரசேகர் சுப்பையா வரவேற்பு தெரிவித்திருப்பதோடு, இந்த நியமனத்தின் மூலம், மலேசியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான வணிக மற்றும் மற்ற துறைகளிலான நல்லுறவுகள் மேலும் வலுப்படும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

“வழக்கமான பாரம்பரிய முறைப்படி, ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளராக இருப்பவரே, மாநில முதல்வராகவும் பதவி வகித்தால், சிறப்பான, வலுவான ஆட்சியை வழங்க முடியும், உடனுக்குடன் முடிவுகளை எடுப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பதோடு, கட்சியின் கொள்கைகளை, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் செயல்படுத்துவதிலும் விரைந்து, சிறப்பாக செயல்பட முடியும் என்ற அடிப்படையில்தான் சசிகலா முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் மலேசியாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான வணிக, மற்றும் மற்றைய துறைகளிலான நல்லுறவுகள் மேம்படும் என்றும் நம்புகின்றேன்” என்று செல்லியல் ஊடகம் நடத்திய பிரத்தியேகப் பேட்டியில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில், மலேசிய அரசாங்கத்தின் சார்பிலும், தனியார் நிறுவனங்களின் சார்பிலும் பல வணிக, கட்டுமான, மேம்பாட்டுத் திட்டங்கள் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட சந்திரசேகர் சுப்பையா  முயற்சிகள் எடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அந்த வகையில் தமிழக அரசுக்கும் மலேசியாவுக்கும் இடையில் தொடர்ந்து அரசாங்கம், மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக மேம்பாட்டுத் திட்டங்கள், வணிக கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட என்னாலியன்ற ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருவேன்” என்றும் சந்திரசேகர் சுப்பையா மேலும் தெரிவித்தார்.

கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதியின் தலைவருமான சந்திரசேகர் சுப்பையா முன்னாள் கூட்டரசுப் பிரதேச மாநிலத் துணைத் தலைவர் என்பதோடு, முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் (செனட்டர்) ஆவார்.