Home Featured உலகம் ஒபாமாவின் புதிய வீடு எங்கே தெரியுமா?

ஒபாமாவின் புதிய வீடு எங்கே தெரியுமா?

1003
0
SHARE
Ad

barack-obama-family-tourவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒபாமா, கடந்த மாதம் தனது குடும்பத்தோடு வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.

பின்னர், கரீபியன் தீவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றிருந்த அவர், சில தினங்களுக்கு முன்னர் தான் வாஷிங்டன் திரும்பினார்.

தற்போது, வாஷிங்டன் அருகே உள்ள கலோரமா என்ற பகுதியில், 8,200 சதுர அடி பரப்பளவில் மாளிகை ஒன்றை வாங்கியுள்ள ஒபாமா, அங்கு தனது மனைவி மிச்சல் ஒபாமா மற்றும் மகள் ஷாஷாவோடு மகிழ்ச்சியாக ஓய்வெடுத்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

Obama

(ஒபாமாவின் புதிய வீடு)

மூத்த மகள் மலியா, நியூயார்க்கில் உள்ள ஹார்வே வெயின்ஸ்டெயின் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், இளைய மகளின் படிப்பு முடியும் வரை, ஒபாமா வாஷிங்டனிலேயே தங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

சரி.. ஒபாமாவின் அண்டை வீட்டார் யார் யார் தெரியுமா? – அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப்பும், அவரது கணவரும் தொழிலதிபருமான ஜேர் குஷ்னெரும் அதே பகுதியில் தான் வசிக்கின்றனர். அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோசும் அப்பகுதியில் தான் வசிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.