Home நாடு “தங்கமணி மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது” – டத்தோ சந்திரசேகர், விஜய்மோகன் ஆழ்ந்த இரங்கல்

“தங்கமணி மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது” – டத்தோ சந்திரசேகர், விஜய்மோகன் ஆழ்ந்த இரங்கல்

471
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான தங்கக் குரலோன் தங்கமணியின் திடீர் மறைவு குறித்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது டத்தோ சந்திரசேகர் சுப்பையாவும், விஜய்மோகன் கருப்பையாவும் கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்தனர்.

“நாட்டின் தமிழ் இலக்கிய உலகிற்கு குறிப்பாக மேடை, வானொலி மற்றும் தொலைக்காட்சி கலைத் துறைக்கு அவரது மறைவு ஈடு இணை இல்லாத இழப்பாகும். 1991-ம் ஆண்டு “நாதஸ்வரா” எனும் முதல் தனியார்மய தமிழ் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சி TV 2-ல் ஒளிபரப்பாக தொடங்கியது முதல் அதன் தயாரிப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தவர் அவர்” என சந்திரசேகர் சுப்பையாவும், விஜய்மோகன் கருப்பையாவும் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டனர்.

“தங்கமணியின் குரல் வளம் “நாதஸ்வரா”- வின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. அந்த நிகழ்ச்சியின் இயக்குனராகவும் இணை தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். மேடை, வானொலி மற்றும் தொலைக்காட்சியின் வழியாக. இந்நாட்டின் தமிழ் கலை துறைக்கு ஈடு இணையற்ற சேவையை ஆற்றியுள்ள பெருமை அவருக்கு உண்டு. நாதஸ்வராவைப் பொறுத்தவரை அவரது மறைவு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்” என டத்தோ சந்திரசேகர் சுப்பையா, விஜய்மோகன் கருப்பையா இருவரும் தங்களின் இரங்கல் செய்தியில் தெரிவித்தனர்.