Home நாடு “தங்கக் குரலோன்” வே.தங்கமணி காலமானார்

“தங்கக் குரலோன்” வே.தங்கமணி காலமானார்

633
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நமது நாட்டில் தனது இனிமையான, கம்பீரமான குரலால் அனைவரையும் கவர்ந்த – நன்கு அறிமுகமான கலைஞரான வே.தங்கமணி காலமானார்.

அவருக்கு வயது 74. இருப்பினும் அவரின் இறுதிக் காலம் வரை இளமையான குரல்வளத்தைக் கொண்டிருந்தவர் தங்கமணி.

சிறந்த குரல் வளத்திற்காக அவர் “தங்கக் குரலோன்” என சிறப்பித்து அழைக்கப்பட்டார். எண்ணற்ற நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கும் அவர் மேடை நாடக நடிகராகவும், திரைப்பட நடிகராகவும் திகழ்ந்தார்.

#TamilSchoolmychoice

பன்முகத் திறன்கள் வாய்ந்த அவரின் இழப்பு மலேசியக் கலையுலகிற்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

கண்ணதாசன் அறவாரியம் போன்ற சமூக இயக்கங்களிலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தவர் தங்கமணி.

தங்கமணியின் மறைவுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.