Home Featured தமிழ் நாடு அறிஞர் மணவை முஸ்தபா காலமானார்!

அறிஞர் மணவை முஸ்தபா காலமானார்!

834
0
SHARE
Ad

manavai-mustapha-passed awayசென்னை – ஐக்கிய நாட்டு மன்றத்தின் துணை நிறுவனமான யுனெஸ்கோவின் சார்பில் வெளிவந்த ‘கூரியர்’ என்ற அழகிய வடிவிலான தமிழ்ப் பதிப்பு இதழுக்கு ஏறத்தாழ 35 ஆண்டுகாலம் ஆசிரியராக இருந்து புகழ்பெற்ற தமிழறிஞர் மணவை முஸ்தபா நேற்று உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 82.

தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்ற அவர், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைகளைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார்.  சுமார் 8 லட்சம் அறிவியல் தமிழ் கலைச் சொற்களை அவர் உருவாக்கியுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

31 நூல்களை எழுதியுள்ள மணவை முஸ்தபா, 7 நூல்களை ஆங்கிலத்தில் இருந்தும், 3 நூல்களை மலையாளத்தில் இருந்தும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா களஞ்சியம்’ தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் இருந்து அந்நூல் வெளிவருவதில் முக்கிய பங்காற்றினார்.